தமிழகம்

ரங்கசாமி நல்ல முடிவு எடுப்பார்: புதுவை பாஜக நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசுடன் இணக்கமான அரசு அமைவது அவசியம் என்பதை ரங்கசாமி உணர்வார் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நேற்று இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. லாஸ்பேட்டை பகுதியில் நடைபெற்ற வாகன பேரணியின் மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரி மக்கள் நலனுக் காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. இதில்சுயநலமாக சிந்தித்தால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும். மாநிலத் தின் மீதுள்ள அக்கறையால் ரங்கசாமி நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் அரசால் தான் புதுச்சேரியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ரங்கசாமி உணர்வார் என்ற நம்பிக்கையுள்ளது” என்றுகுறிப்பிட்டார்.

கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா. மணவெளி பகுதியில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கிவைத்து கூறுகையில், “பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையில் ஆலோசனை கேட்டுள்ளோம். மக்கள் விரும்பும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT