தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் இருக்கும் ஜெயலலிதா கோயிலில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் ஐயப்பன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
சாதித்துக் காட்டிய இரு பெரும் தலைவர்கள் இன்றி தேர்தலை சந்திக்கிறோம். இதனால் இத்தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஏற்கெனவே முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை துணை முதல்வர் அறிவித்தார். ஒன்றரை கோடி தொண்டர்கள் முன்மொழிந்த நிலையிலும் திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் இங்கு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி முதல் படை வீரராக முன் மொழிந்தோம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது கனவை நன வாக்கிய முதல்வருக்கு நாம் நன் றிக் கடன் செலுத்தும் வகையில் பழனிசாமியை மீண்டும் முதல்வ ராக்க வரும் தேர்தலில் கிளை நிர்வாகிகள் ராணுவ வீரர்களாக களப்பணி ஆற்ற வேண்டும்.
திருமங்கலம் தொகுதியில் மொத்தம் 402 பூத்கள் உள்ளன. ஒவ்வொரு பூத்துக்கும் 45 நிர்வாகிகள் உள்ளனர். நீங்கள் தேர்தல் விதிமுறையைப் பின்பற்றி களப் பணியாற்ற வேண்டும்.
திருமங்கலம் தொகுதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது, ரூ.33 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, திருமங் கலத்தில் புதிய கோட்டாட்சியர் அலுவலகம், கள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலத்துக்கு புதிய கல்வி மாவட்டம் என்று பல்வேறு திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துக் கூறவேண்டும்.
கடந்த தேர்தலில் திருமங்கலம் தொகுதி 47.36 சதவீத வாக்கு பெற்றுத் தந்தது. 23,590 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை எனக்கு உருவாக்கித் தந்தீர்கள். 234 தொகுதிகளில் அதிகமான வாக்குகள் பெற்ற தொகுதி திருமங்கலம் என வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக் கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.