தமிழகம்

ஒரே நேரத்தில் 5 மாநாடு போல நடந்த பொதுக்கூட்டம்: கே.என்.நேருவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

செய்திப்பிரிவு

5 மாநாடுகளை ஒரே நேரத்தில் நடத்துவதைப்போல திமுக பொதுக்கூட்டத்தை நடத்தியுள் ளதாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

திருச்சி அருகே சிறுகனூரில் நேற்று நடைபெற்ற தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்துக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் எண்ணத்துடன் கனவுத் திட்டத்தை அறிவிக்கும் இடம்தான் தீரர்களின் கோட்டமாம் இந்த திருச்சி மாநகரம். இதனை மாநாடு என அறிவிக்கவில்லை. மாபெரும் பொதுக்கூட்டம் எனவே அறிவித் தேன். ஆனால் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும், மாவட்டச் செயலாளர்களும் இணைந்து இதை மாநாடாகவே நடத்திவிட்டனர். அதுவும் 5 மாநாடுகளை ஒரே நேரத்தில் நடத்தியதைப்போல இப்பொதுக் கூட்டம் நடந்து கொண்டுள்ளது.

பொதுவாகவே, நேரு என்றால் மாநாடு. மாநாடு என்றால் நேரு என்பதை நான் எப்போதோ சொல்லிவிட்டேன். எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும், நட்பை நெஞ்சுக்கு நிகராக அரவணைப்பதிலும் நேருவுக்கு நிகர் நேருதான். அவர் மட்டுமல்ல, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோர் முப்படை தளபதிகள் போல வழிநடத்தியுள் ளனர். அவர்களையும் பாராட்டு கிறேன் என்றார்.

முன்னதாக, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT