`தூத்துக்குடியில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வராததற்கு மாநில அரசின் அலட் சியப்போக்கே காரணம்’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் தூத்துக்குடியில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வைகோ பேசியதாவது:
`1992-ல் வீசிய சூறைக்காற்றுக்கு பிறகு 2015-ல்தான் மழை வெள் ளத்தால் தூத்துக்குடி அதிகம் பாதிக் கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் நடைபெற்ற ஆக்கிரமிப்புகளை திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளும் தடுக்கத் தவறிவிட்டன.
தூத்துக்குடியில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிள் ஓடை வரைபடத்தில் உள்ளபடி அமைக்கப்படவில்லை. 3-ம் மைல் பகுதியில் இருந்து கோரம்பள்ளம் பகுதிவரை பணிகள் செய்யப்படவில்லை. கொம் பாடி ஓடையில் இருந்து பெருக் கெடுத்து வரும் நீர்வரத்துப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை கரிமணல் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீமைக்கருவேல மரங்களும் ஆக்கிரமித்துள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் வீடுகள், உடைமைகள், கல்விச் சான்றிதழ்கள் உட்பட அனைத்தையும் இழந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக் கத்தக்கது.
மழை நின்ற பிறகும் கடந்த 8 நாட்களாக வெள்ளம் வடிய வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். ராட்சத நீரேற்றிகளை வைத்து, தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற அரசு முன் வர வேண்டும்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாழை ஏக்கருக்கு ரூ. 1.50 லட்சம், நெற்பயிருக்கு ரூ. 25 ஆயிரம், மானாவாரிபயிர்களான உளுந்து, பாசி, மக்காச்சோளத்துக்கு ரூ. 20 ஆயிரம், மாட்டுக்கு ரூ. 50 ஆயிரம், ஆட்டுக்கு ரூ. 10 ஆயிரம், கோழிக்கு ரூ. 500 வழங்க வேண்டும்.
வெள்ள நிவாரணங்கள் வழங்கு வதை கண்காணிக்க மாவட்ட அளவில் அனைத்து கட்சியினர், விவசாயிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். மத்திய அரசு வெள்ள நிவாரணமாக தமிழகத் துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மத்தியக்குழு தூத்துக்குடிக்கு வரவில்லை. இதுபற்றி தமிழக அரசும் மத்தியக் குழுவினரை வலியுறுத்தவில்லை. இது தமிழக அரசின் அலட்சிய போக்கை காட்டுகிறது’ என்றார்.
வெள்ளம் சூழ்ந்துள்ள குறிஞ்சி நகர், ஸ்டேட் பேங்க் காலனி, அம் பேத்கர் நகர், முத்தம்மாள் காலனி பகுதிகளை வைகோ தலைமையில் பின்னர் பார்வையிட்டனர்.