தமிழகம்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

2010ல் ஆரம்பித்த பயணம்

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய சீமான், "அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது" எனக் கூறினார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

SCROLL FOR NEXT