சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகா ரிகள் மதுரையில் வாகனச் சோதனை செய்தனர்.
சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி தமிழகத்தில் கடந்த 26-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மதுரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சுவர் விளம்பரங்களை அழிப்பது, பொது இடங்கள் மற்றும் கூட்டம் நடத்துவதைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் மாட்டுத்தாவணி-மேலூர் சாலை, திருப்பரங்குன்றம்-திருமங்கலம் சாலை, காளவாசல்-திண்டுக்கல் சாலை, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஒத்தக்கடை-திருவா தவூர் சாலை, ரிங்ரோடு உட்பட பல்வேறு சாலைகளில் தினமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கள் வாகனங்களைச் சோதனை செய்கின்றனர்.
அப்போது தொழில் நிமித்த மாகப் பணம் எடுத்துச் செல்லும் பலர் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆனால் அரசியல் கட்சியினர் பெரும்பாலும் வாகன சோதனைகளில் சிக்குவதில்லை. அவர்கள் முன்கூட்டியே குடோ ன்களில் பதுக்கி வைத்தி ருக்கும் பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கும் போது மட்டுமே சிக்குகின்றனர். அதனால் அரசியல் கட்சியினரை உளவுத் துறை போலீஸார் உதவியுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வாகனச் சோதனை செய்ய வேண்டும்.