பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 19 பேர் பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயlலாளர் அருண் இன்று (மார்ச் 6) வெளியிட்ட தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 1,322 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 13 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 843 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 69 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 104 பேரும் என மொத்தம் 173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதுச்சேரி பாக்கமுடையான்பேட் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.

இன்று 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரமாக (97.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

33 நாட்களில் 10 ஆயிரத்து 681 சுகாதாரப் பணியாளர்களும், 22 நாட்களில் 2,914 முன்களப் பணியாளர்களும், 5 நாட்களில் 2,543 பொதுமக்களும் என 16 ஆயிரத்து 138 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT