பூத் வாரியாக வாட்ஸ்அப் குழுவில் இணைய வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி களிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அளித்துள்ள மனு விவரம்:
புதுச்சேரியில் பாஜக தரப்பிலி ருந்து வாட்ஸ்அப் குழுவில் இணையஎஸ்எம்எஸ் தகவல்கள் வாக்காளர்க ளுக்கு வந்தன. தொகுதி பூத் வாரியாக வாட்ஸ்அப் குழுவில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பூத் அளவில் வாக்காளர்களை அடையாளம் கண்டு இணைக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்தபோது மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வாக்காளர்கள் விவரங்கள் பெற்றதாக குறிப்பிட்டாலும், ஆதார் தகவல்கள் மூலம்தான் தொலைபேசி எண் உட்பட முக்கியத் தகவல்கள் பெறப் பட்டுள்ளதாக சந்தேகம் அடைகிறோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இது தனிநபருக்கான அடிப்படை உரிமையை மீறுவதாக கருதுவதுடன், இத்தரவு சேகரிப்பானது திருட்டுக்கு சமமாகும். அதனால் அடிப்படை உரிமை மீறியதற்காக, இந்திய தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறியதற்காக பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இத்தரவு சேகரிப்பானது திருட்டுக்கு சமமாகும்.