கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்புப் பயணத்தை மேற்கொண்டார். நேற்று காலை தேன்கனிக்கோட் டையில் பயணத்தைத் தொடங்கிய ஸ்டாலின், திப்பனேஅக்ரஹாரத்தில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகள், முதி யோர் உதவித் தொகை பெறவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. விண்ணப்பங்களைக் கூட அரசு அதிகாரிகள் வாங்குவதி ல்லை. விவசாயத்துக்கு மின்சாரம் இல்லை. காட்டு யானைகள், பன்றிகளால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு எந்தவிதமான இழப்பீடும் தருவதில்லை ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து தளியில் மொழி சிறுபான்மைப் பிரிவு மக் களிடம் நடந்த கலந்துரையாடலின் போது, கடந்த திமுக ஆட்சியில் கட்டாயத் தமிழ் சட்டத்தினால் தெலுங்கு, கன்னடம் பேசும் மாணவர்கள் அவரவர் மொழியில் கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சிறுபான்மைப் பிரிவு மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பின்னர், ஓசூரில் உள்ள தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். 15 நாட்களுக்கு ஒருமுறை தொகுதிக்குச் சென்று மக்களை சந்திக்காத எம்.எல்.ஏ.க் கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதனை மத்திய அரசு ஆதரவுடன் திமுக செயல்படுத்தும்.
அதில் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்பட்டால், திமுக ஆட்சி வந்தவுடன் இதனை கட்சியில் அமல்படுத்தி 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது தொகுதி மக்களை சந்திக்காத பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்து இடைத்தேர்தல் நடத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வர முயற்சி செய்வோம் என்றார்.