திமுகவில் தற்போது ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனைப்படி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படிபுதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதை அறிந்த சீனியர்கள், மூத்த சிட்டிங் எம்எல்ஏக்கள் பலரும் இந்த முறை தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.
இது குறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
இந்த முறை மூத்த மற்றும் வயதானவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைவு எனத் தெரிகிறது. ஐ பேக் நிறுவனம் கள ஆய்வு செய்து திமுக தலைவரிடம் அளித்த அறிக்கையில், வயதான சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளதாம்.
அதே நேரம் செல்வாக்குள்ள சில மூத்த தலைவர்கள், அவர்களது வெற்றி வாய்ப்பு குறித்த தகவல்களையும் ஐ பேக் நிறுவனம் அளித்துள்ளது.