மதுரையில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி முதலமைச்சரிடம் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் புகார் அளித்துள்ளது. அச்சங்கத்தினர் புதன்கிழமை அளித்த மனுவில் குறிப் பிட்டுள்ளதாவது:
மதுரை அருகே தனியார் நடத்தும் மனநல காப்பகத்தில் கடந்த 5ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாக கூறி சாலையில் ஓடிவந்துள்ளார்.இதையடுத்து, அப்பகுதியிலுள்ள பெண்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி சங்கத்தினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் அந்நிறுவனத்தை சென்று பார்வையிட்டதில் சந்தேகத் துக்குரிய பல நிகழ்வுகள் காணப்பட் டதாக தெரிவிக்கின்றனர். பல்வேறு விதங்களில் பாதிக்கப் பட்ட 170-க் கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப் பற்ற நிலைமையில் ஆண்களுடன் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள் ளதாகவும், பெரும்பாலும் அனைவருமே மயக்கநிலையில் காணப்பட்டதாகவும், யாருடனும் பேச முடியவில்லை என்றும் தெரிவிக் கின்றனர். அவர்களுக்கு மருத்துவர் கள் இல்லாமல் மயக்க மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதற் கான அறிகுறிகள் இருந்துள்ளன. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் தெரிகிறது.
அந்தக் காப்பகத்தில் இருந்த 124 பேர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இறந்துள்ளதாகவும், எமது பிரதிநிதிகள் அறிந்துள்ளனர். எனவே அங்கு சேர்க்கப்படுகிறவர்கள் விபரம் அரசுக்கு தெரிவிக்கப்படுகி றதா அங்கு சேர்க்கப்படுபவர்களை அவர்கள் குடும்பத்தினருடன் இணைக்க முயற்சி எடுக்கப்படுகிறதா என்கிற கோணத்தில் உயர்மட்ட புலன் விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவர்கள் இல்லாமல் மயக்க மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகள் இருந்துள்ளன.