தமிழகம்

புதுச்சேரி காங்கிரஸின் போராட்டங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? :

செய்திப்பிரிவு

புதுவையில், கடந்த 2016- சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றது.நாராயணசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. தொடக்கத்திலேயே துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அது முதலே, அமைச்சரவை எடுக்கும் பல்வேறு முடிவுகளை அவர் நிராகரிப்பதும், மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்பு களை திருப்பி அனுப்புவதுமாக இருந்தார்.

கிரண்பேடியின் போக்கை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாகவும் கூறி ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளு டன் பல்வேறு போராட்டங்களை நடத்தின.

கிரண்பேடி மீதும், அரசின் மீதும் பல்வேறு விமர் சனங்கள் மக்கள் மத்தியில் எழத் தொடங்கின. நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனதற்கு கிரண்பேடியும், மத்திய பாஜக அரசுமே காரணம் என்பதை மக்கள் மத்தியில் பதிய வைக்க காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியது. தேர்தல் நெருங்கும் வேளையில் கூட துணைநிலை ஆளுநரை கண்டித்து 3 நாட்கள் போராட்டம் நடத் தினர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உத்தரவின் படி கிரண்பேடி நீக்கப்பட்டு, தமிழிசை புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸில் 5 பேரும், திமுகவில் ஒருவரும் பதவி விலக, எதிர் தரப்புடன் 3 நியமன எம்எல்ஏக்கள் ஒன்று சேர ஆட்சி கவிழ்ந்தது.

இதற்கு மத்தியில், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், திமுக என பிரதான கட்சிகளின் எம்எல்ஏக்களை தங் கள் வசம் இழுத்து, புதுவையில் தங்கள் பலத்தை காட்ட பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

புதுவையில் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் முழு காரணம் மத்திய பாஜக தான் என்று காங் கிரஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுடன், சமையல் எரிவாயு விலை உயர்வுஎன மக்கள் பாதிப்பு பிரச்சினைகளையும் காங்கிரஸ் கையில் எடுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர் சித்து இவ்வாறு போராட்டங்களை நடத்துவதன் மூலம்,வாக்குகளை பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. இத்தகைய தொடர் போராட்டங்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்குமா என்பது மே 2-ம் தேதி தெரிந்து விடும்.

SCROLL FOR NEXT