தமிழகம்

சென்னை தனியார் கிடங்கில் தீவிபத்து: பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

செய்திப்பிரிவு

சென்னையில் தனியார் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன.

சென்னை காசிமேடு அருகே எஸ்.என்.செட்டி சாலையில் ஏராளமான கிடங்குகள் இயங்கி வருகின்றன. நாகூரா தோட்டம் அருகே இருந்த தனியார் கிடங்கு ஒன்றில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எலட்க்ரானிக் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்று தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்பட்டதில், கிடங்கில் தீ பிடித்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராடத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர்.

          
SCROLL FOR NEXT