திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை பால்வளத்துறை அமைச் சர் பி.வி.ரமணா, மழை நிவாரண உதவிக்கான ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.பிரபாகரன், மாவட்ட ஆட்சி யர் வீரராகவ ராவ் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில், “கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக அதிக தண்ணீர் வெளி யேற்றப்படுவதால், கரை யோரங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்ற னர். தண்ணீரின் வேகம், ஆழம் தெரி யாமல் இறங்க வேண்டாம்.
குடும்ப அட்டை இழந்தவர்களுக்கு நகல் அட்டை வழங்கிட திருவள்ளூர் மாவட்டத்தில் 57 குழுக்கள் ஏற்படுத்தப் பட்டு, கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நகல் அட்டை வழங்கப்படும். பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்கள் அனைவருக்கும் கணக்கெடுப்புக்குப் பின் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப் படும்’என்றார்.
முன்னதாக வெங்கல் ஏரி, திருக்கண்டலம் தடுப்பணை உடைப்பு ஏற்பட்டுள்ளதையும் பொன்னேரி ஆரணி ஆறு பாலத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், தட்டமஞ்சு, வஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆரணி ஆற்று ஓரம் நீரில் மூழ்கிய பயிர்களையும் பார்வையிட்டார். ஆர்.எஸ்.சாலையில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஊராட்சிக் குழுத் தலைவர் பா.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் முருகவேல், பொதுப்பணித்துறை உதவிப் பொறி யாளர் வெற்றிவேல், வருவாய் கோட் டாட்சியர் மா.நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.