ரூ.2.29 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழு 5-ன் அதிகாரி முருகன், அரவக்குறிச்சி வட்டாட்சியர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கிறார். 
தமிழகம்

கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சம் பறிமுதல்

க.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு 5-ன் அதிகாரி எம்.முருகன் தலைமையில் க.பரமத்தி நொய்யல் சாலையில் முன்னூர் என்ற இடத்தில் நேற்று (மார்ச் 2) நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தென்னிலையைச் சேர்ந்த வடிவேல் மற்றும் 3 பேர் காரில் வந்துள்ளனர். காரை சோதனையிட்டபோது, அதில், 2 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாய் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு அரவக்குறிச்சி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT