சிதம்பரத்தில் ஸ்ரீசுபம் காஸ் ஏஜென்சி சார்பில் காஸ் அயன்பாக்ஸ் அறிமு கம் செய்யப்பட்டது.
இண்டேன் சார்பில் ஐந்து கிலோ காஸ் சிலிண்டருடன் இயங்கக் கூடிய காஸ் அயர்ன்பாக்ஸ் அறிமுகப் படுத்துதல் மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி திருச்சி மண்டல இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக சிதம்பரம், சுபம் காஸ் ஏஜென்சியால் நேற்று சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது.
சிதம்பரம் ஸ்ரீ சுபம் காஸ் ஏஜென்சி யின் நிர்வாக இயக்குநர் பி.பி.கே சித்தார்த்தன் தலைமை தாங்கினார். ஸ்ரீ சுபம் காஸ் ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் புகழேந்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ராஜேஷ், மண்டல முதுநிலை விற்பனை மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் புதுவை பகுதி விற்பனை மேலாளர் வில்லியம் கேரி ஆகியோர் கலந்து கொண்டனர். எரிவாயு மூலம் இயங்கும் அயர்ன்பாக்ஸின் நன்மைகள்மற்றும் அதன் செயல் தன்மையையும் விரிவாக விளக்கினர்.
இதில் சிதம்பரம் பகுதியில் இருக்கும் சலவை தொழிலாளர்கள் மற்றும் சிதம்பரம் பகுதி இன்டேன் காஸ் விநியோகஸ்தர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சுபம் காஸ்மேலாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.