லாஸ்பேட்டை பகுதியில் மக்களிடம் தேர்தல் டெபாசிட் பங்களிப்புத் தொகையைப் பெறும் பாஜகவினர். 
தமிழகம்

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவருக்காக ரூ.1 வீதம் மக்களிடமிருந்து டெபாசிட் தொகை வசூலிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையை மக்களிடம் இருந்து உண்டியல் மூலம் பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் லாஸ்பேட் தொகுதியில் வழக்கமாக போட்டியிடுவார். கடந்த முறை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்முறையும் லாஸ்பேட் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையை மக்களிடம் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் உண்டியல் மூலம் பெற்று வருகின்றனர்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டதற்கு, “லாஸ்பேட் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும் உள்ள நிர்வாகிகளுடன் இணைந்து உண்டியல் மூலம் விருப்பம் உள்ளவர்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே பெறுகிறோம். பாஜக தலைவர் செலுத்தும் டெபாசிட் தொகையில் மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT