மாநகராட்சி ரசீது 
தமிழகம்

மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டுக்கு காரில் சென்றால் ரூ.30 நுழைவு கட்டணம்

செய்திப்பிரிவு

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டுக்கு காரில் சென் றால் மாநகராட்சி ரூ.30 நுழை வுக் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனா ஊரடங்கின்போது, தொற்று பரவலைத் தடுக்க கரி மேட்டில் இருந்த மீன் மார்க்கெட் தற்காலிகமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாற்றப் பட்டது. அதுபோல, சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள் நகரின் வெவ்வேறு இடங்களுக்கு மாற் றப்பட்டன. தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், மற்ற சந்தைகள் முன்பு செயல்பட்ட பழைய இடங்களுக்கே மாற்றப்பட்டன. ஆனால், கரிமேடு மீன் வியாபாரிகள் மட்டும் பழைய இடத்துக்குச் செல்ல மறுத்து வருகின்றனர். தற்போது வரை அவர்கள் அதே இடத்தில் செயல் படுகின்றனர்.

இந்நிலையில் மீன் வாங்க வருவோர் காரில் சென்றால் நுழைவுக் கட்டணமாக மாந கராட்சிப் பணியாளர்கள் ரூ.30 வசூல் செய்கின்றனர். ஏற்கெனவே பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துவிட்ட நிலையில், ரூ. 30 வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் ஆதங் கம் அடைந்துள்ளனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநகராட்சிநிர்ணயித்த நுழைவுக்கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5, காருக்கு ரூ.30, வேனில் வருவோருக்கு ரூ.40, லாரிகளுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை விட யாராவது கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக் கப்படும். கட்டணத்தைக் குறைக்க நிர்வாகம்தான் முடிவு செய்யும் என்றனர்.

SCROLL FOR NEXT