கோப்புப்படம் 
தமிழகம்

‘தமிழ்நாட்டை பின்பற்றியே புதுச்சேரியிலும் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க வேண்டும்’

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு களுக்கு தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக் காலில் தேர்தலுக்கு பின்னால் தேர்வு நடத்தலாமா என ஆலோசனை செய்து வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து புதுவை முன்னாள் கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திருநள்ளாறில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி கல்வித் துறையும் செயல்படுத்தி வருகிறது.

கரோனா பரவல் சூழல், பள்ளி கள் முழுமையாக திறக்கப்படாத நிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. புதுச்சேரி மாணவர்களின் நிலை குறித்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித் துறை வெளியிடவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். இது புதுச்சேரி மாணவர்கள், பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித் துறையுடன் இணைந்த புதுச்சேரி கல்வித் துறை தனியாக ஒரு முடிவை எடுக்க முடியாது. எனவே, துணைநிலை ஆளுநர் தேர்வு நடத்தலாம் என்ற கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, தமிழக கல்வித் துறை எடுத்த முடிவை, புதுச்சேரியில் செயல்படுத்தி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT