சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நலக் கூட்டியக்கத்தின் கூட்டணி நிலைப்பாடு மற்றும் தேர்தல் அணுகுமுறை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
திமுக, அதிமுகவுக்கு மாற் றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப் பட்டது.
இந்த இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடு தலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், மமக சமீபத்தில் வெளி யேறியது.
மற்ற 4 கட்சிகளும் தொடர்ந்து கூட்டியக்கத்தில் உள்ளன. இந்த இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று அதில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் தலை வர்கள் கூறிவந்தனர்.
மேலும், சில கட்சிகள் தங்களுடன் இணையக்கூடும் என்றும் தெரி வித்திருந்தனர்.
கூட்டியக்கத்தின் தேர்தல் அணுகுமுறை குறித்து நவம்பர் 2-ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தார். அதன்படி, மக்கள் நலக் கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் இன்று நடக் கிறது.