தமிழகம்

வடகிழக்கு பருவமழையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு விடுமுறை இல்லை - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

சி.கண்ணன்

வடகிழக்கு பருவமழையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக் கும் என்பதால் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர் களுக்கு விடுமுறை இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித் துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

மழைநீர் தேங்குவதால் காய்ச் சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் வடகிழக்கு பருவ மழை முடியும் வரை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் டாக்டர்கள் யாருக்கும் விடுமுறை இல்லை என்று சுகாதாரத்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி யில் பரவிய மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் விடுமுறையை டெல்லி அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

டெங்கு பாதிப்பு

இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி.சாமிநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை கள், வட்ட தலைமை மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றன. வடகிழக்கு பருவ மழையால் டெங்கு காய்ச்சல் மற்றும் மற்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என்பதால் அரசு டாக்டர்கள் யாரும் விடுப்பு எடுக்க வேண் டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டாக்டர்கள் சம்மதம்

மருத்துவக் கல்வி இயக்ககத்தில் (டிஎம்இ) இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள் துறையில் (டிஎம்எஸ்) இருந்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் (டிபிஎச்) இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக் கும் தகவல் வந்தது.

அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் வட கிழக்கு பருவமழை முடியும் வரை யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று டாக்டர்களிடம் தெரிவித்தது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் ஒரு அவசர நிலையாக கருதி நாங்களும் விடுப்பு எடுக்காமல் பணியாற்றுகிறோம் என்று முழுமனதுடன் தெரிவித்து இருக்கிறோம்.

தீபாவளி இல்லை

தீபாவளி பண்டிகை அன்று பெரிய கார்ப்பரேட் மருத்துவமனை கள் செயல்படும். சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கும். அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங் களுக்கும் சிகிச்சைக்கு வருவார் கள். மேலும் காய்ச்சலால் பாதிக் கப்படுபவர்களும் வருவதால், அன்று கொஞ்சம் நேரம் கூட ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டும். அரசு டாக்டர்களுக்கு தீபாவளிப் பண்டிகை இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமியிடம் கேட்டபோது, “மருத்துவப் பணி என்பது நேரம் பார்த்து வேலை செய்வது இல்லை. அது சேவை யாகும். வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் டாக்டர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்று வது வழக்கமான ஒன்றுதான். டாக்டர்களும் விடுமுறை எடுக்கா மல் பணியாற்றுவார்கள்” என்றார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 2,965 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரி ழந்தனர். சென்னையில் மட்டும் 96 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டனர். 15 வயது பள்ளி சிறுவன் மட்டும் உயிரிழந்து இருக் கிறான். சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 49 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் “இதைவிட பல மடங்கு டெங்கு பாதிப்பும், உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கிறது. அரசு உண்மை யான புள்ளி விவரத்தை தெரிவிக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT