தமிழக சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடை பெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக காவல் துறையினர், துணை ராணுவத் தினர், எல்லை பாதுகாப்புப் படை யினர் ஈடு படுத்தப்பட உள்ளனர்.
மேலும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணியாற்ற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப் பமுள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் முன்னாள் படை வீரர் நலவாரிய அலுவலகம் மூலம்மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நல சங்கம் சார்பில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 94429-92526என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ள லாம்’’ என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.