கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன். 
தமிழகம்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்

வீ.தமிழன்பன்

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

மத்திய அரசு, 60 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள அனுமதித்த நிலையில், இன்று (மார்ச் 2) காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மருத்துவமனையில் சிறிது நேரம் கண்காணிப்பில் இருந்த அவர், எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில் புறப்பட்டுச் சென்றார்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 542 சுகாதாரப் பணியாளர்கள், 64 முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 88 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தில் இன்று புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT