தமிழகம்

இடதுசாரிகள்-திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: எத்தனை தொகுதிகள் முடிவாகும்?-விவரம்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கிய திமுக, பின்னர் மதிமுக, விசிகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது. அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

நேற்று ஐயூஎம்எல், மமகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஐயூஎம்எல்லுக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும் உடன்பாடு ஆனது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தைக்கு அறிவாலயம் வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 12 இடங்கள் வரை கேட்பதாகத் தெரிகிறது. ஆனால், திமுகவின் வழக்கமான உறுதியான முடிவு 5 இடங்கள் அல்லது 6 இடங்கள் என்பதே. அதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளது.

இதேபோன்ற நிலைதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என திமுக தரப்பில் தகவலாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு ஒப்புக்கொண்டு சென்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதேபோன்று எண்ணிக்கை வைத்து ஒப்புக்கொள்ள வைக்கலாம் என்பது திமுகவின் கணிப்பாக உள்ளது. கடந்தகாலச் செயல்பாடுகளும் அதுவாக உள்ள நிலையில் இன்றே சிபிஎம், சிபிஐக்கான தொகுதி உடன்பாடு உறுதியாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT