விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்களை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. 
தமிழகம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளப் பயிற்சி

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக் கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி மாவட்ட தேர்தல்அலுவலரும், ஆட்சியருமான அண்ணாதுரை தலைமையில் நேற்று நடை பெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங் களின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் மூலமாக விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரங் களின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT