மானாம துரையில் நள்ளிரவில் கடத்தப்பட்ட 46 ரேஷன் அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். மானாமதுரையில் நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் அதிகாரிகள் மாணிக்கவாசகம், பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாகனங்களைச் சோதனையிட்டனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் 46 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதையடுத்து மூட்டைக ளையும், அவற்றைக் கடத்தப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.