விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன் றார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், கோரிக்கை மனுக்களைப் பெற ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பெட்டி ஒன்று வைக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் அப்பெட்டியில் மனுக்களை இட்டுச் சென்றனர்.
திருச்சுழி அருகே உள்ள ஆலடிப் பட்டியைச் சேர்ந்த வேதநாயகம் (50) என்பவர் கல்லூரியில் படிக்கும் தனது மகளுடன் பைக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பைக்கில் அவர் வைத்திருந்த 2 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை பார்த்த போலீஸார் அதை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், தனது குடும்ப சொத்தான 4 ஏக்கர் நிலத்தை சிலர் மோசடி செய்து மாரிமுத்து என்பவருக்கு விற்றுவிட்டதாகவும், இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், கோட் டாட்சியர், வட்டாட்சியருக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். அதையடுத்து, அவரை சூலக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.