காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ள பின்புறம் ஹோட்டலில் பிரியாணி வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். (வலது) செல்லாத காசுகள். 
தமிழகம்

காரைக்குடியில் செல்லாத காசுகளுக்கு அரை பிளேட் பிரியாணி: ஹோட்டலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற மக்கள்

செய்திப்பிரிவு

காரைக்குடி ஹோட்டலில் செல்லாத நாணயங்களுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கியதால் ஏராள மானோர் திரண்டனர்.

காரைக்குடி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று ஒரு பைசா முதல் 25 பைசா வரையிலான செல்லாத நாணயங்களுக்கு ரூ.100 மதிப்புள்ள அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால், எதிர்பார்த்ததைவிட 600-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை திருப்பி அனுப்ப விரும்பாத கடை உரிமையாளர், செல்லாத காசுடன் வந்த அனை வருக்கும் பிரியாணி தயாரித்து வழங்கினார்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் கணேஷ் பாண்டி கூறியதாவது:

கட்டுமானப் பொறியியல் படித்த நான் சமையல் கலையில் ஆர்வம் இருந்ததால் ஹோட்டல் தொடங்கினேன். ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகை யில் புதுமையாக ஏதாவது செய்ய நினைத்தேன். அதற்காக நாணயங்களின் பெருமையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு பைசா முதல் 25 பைசா வரை செல்லாத காசு களுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்தேன். இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினோம். இதில் ஏராளமானோர் செல்லாத காசுகளை தேடிப் பிடித்து எடுத்து வந்ததில் மகிழ்ச்சி. அவர்கள் அனைவருக்கும் பிரி யாணி வழங்கினோம் என்றார்.

SCROLL FOR NEXT