தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்த பிறகும் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதுக்கிவைத்து, விநியோகித்து வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் தேர்தல்நடத்தும் அலுவலர் டெய்சி குமாரிடம் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் நேற்று அளித்த புகார் மனு விவரம்:
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் விதிகளை மீறி விராலிமலை தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, தட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார். மேலும், மேட்டுசாலையில் உள்ள அவரது கல்லூரியில் இலவச பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.
எனவே, இலவச பொருட்கள் விநியோகத்தை தடுத்து நிறுத்துவ தோடு, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.