சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசாணையில் உள்ள கட்டணத்தை வசூல் செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

அரசாணையில் உள்ள கட்டணத்தை வசூலிக்கக் கோரி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசா ணையில் உள்ள கட்டணத்தை வசூல் செய்யக் கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியி லும் வசூலிக்க வலியுறுத்தி அக் கல்லூரி மாணவர்கள் 58 நாட்களாக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதி ரொலியாக 58-வது நாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தமிழக அரசு மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. இதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட் டனர். இந்நிலையில் தற்போது மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தும்போது கல்லூரி நிர்வாகம், அரசு கட்டணத்தை வசூலிக்காமல் ஏற்கெனவே வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே கட்ட வேண்டும் என வலியுறுத் தியுள்ளது.

இதையடுத்து மாணவர்கள், தமிழக அரசு அறிவித்த அரசு ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தை நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் செய்து துவங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT