பாமகவோடு தேர்தல் கூட் டணி வைப்பதற்காகவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அவசரக் கோலத்தில் வழங்கப்பட் டுள்ளது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை செல்லூரில் மார்க்சிஸ்ட் சார்பில் தேர் தல் நிதியளிப்பு மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பட்டியலின இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்துக் கட்சியினரையும் அழைத்துப்பேசி கருத் தொற்றுமை ஏற்படுத்தினார். அதன் பிறகு அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங் கினார். அதைப் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கட்சி.
தற்போது கடைசி சட்டப் பேரவைக் கூட்டம் நிறை வடையும் நிலையில் அவ சர கோலத்தில் மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. இதை வன்னியர்கள் மீதான உண்மையான அக்கறை யால் ஆட்சியாளர்கள் நிறை வேற்றவில்லை. பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண் டும் என்பதற்காக உள் இடஒதுக் கீட்டை கொண்டு வந்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு பாமக இளைஞர் அணித் தலை வர் அன்புமணி, அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளித்தார். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். தற்போது அதே ஊழல் வாதிகளோடு பாமக கூட்டணி வைத்துள்ளது. முன்பு ஊழல்வாதிகளாகத் தெரிந்தவர்கள் தற்போது நல்லவர்களாகி விட்டனரா?. எதையாவது செய்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே முதல்வர் பழனிசாமியின் நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.