தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் 2-வது அலை பரவலை தடுக்க வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய திட்டம் மாவட்ட: சுகாதார துறையினர் ஏற்பாடு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 2-வது பரவலை தடுக்க வெளி மாநிலங் களில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் திட்டமிட் டுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங் களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித் துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதாலும், பாதுகாப்பு அம்சங்களை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காததால் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார துறையினர் விளக்க மளித்துள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரண மாக நோய் தொற்று பரவல் வேகமாக குறைந்தது. இதுவரை 20,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20,581 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 351 பேர் உயிரிழந் துள்ளனர்.

மீதமுள்ள 43 பேர் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். வேலூர் மாவட் டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,986-ஆக உயர்ந் துள்ளது.

இதற்கிடையே, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் தமிழகத்திலும் கரோனா 2-வது அலை வேகமெ டுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோல, கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் என வேலூர் மாவட்டத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

மருத்துவம், ஆன்மிகம், சுற்றுலா என வருவோர்கள் மூலம் கரோனா 2-வது அலை பரவுவதை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை முதலில் பரி சோதனை செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யசுகாதாரத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதில், அவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் உடன் வந்தவர்களுக்கும் பரிசோ தனை செய்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வேலூர் மாவட்டத் தில் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே வர வேண்டாம். பேருந்து, ரயில்நிலையங்கள், பஜார், மார்க்கெட் பகுதிகள், வாரச்சந்தை, காய்கறி சந்தை, உழவர் சந்தை, இறைச்சிக் கடை, வழிபாட்டு தலம், திரையரங்கு, சுற்றுலா தலம், பூங்கா என எதுவாக இருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இருப்பிடங்களை தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT