யோகாசனத்தில் உலக சாதனைபடைத்த மாணவிக்கு இலங்கையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரூ.35 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் படிப்பவர் ரேஷ்மா. இவர் 72-வது குடியரசுதின விழாவில் 72 நிமிடங்களில் 72 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் இலங்கையில் நடைபெற உள்ள யோகாசன போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதற்கான நுழைவுக் கட்டணம், போக்குவரத்து விமான கட்டணம், அயல்நாட்டு நுழைவு கட்டணம், உள்ளூர் போக்குவரத்து செலவினம், உணவு மற்றும்தங்குமிடம் ஆகிய செலவினங்களுக்காக நிதியுதவி தேவைப்பட்டது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.35ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) புஷ்பா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.