தமிழகம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீஸில் புகார்: விஜயதாரணி எம்எல்ஏவை தரக்குறைவாக பேசியதாக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்தனர்

செய்திப்பிரிவு

விஜயதாரணி எம்எல்ஏ மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில துணை தலைவர்கள் சாந்தாஸ்ரீ, மானசா ஆகியோர் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கடந்த 19-ம் தேதி சத்திய மூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அப்போது மகளிர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட பேனரை சிலர் கிழித்து ஆண்கள் கழி வறைக்கு கொண்டுபோய் போட்ட னர். மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதாரணி எம்எல்ஏ கடந்த 27-ம் தேதி சத்தியமூர்த்தி பவன் வந்தபோது, அங்கிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

அதற்கு அவர் விஜயதாரணியை தரக்குறைவாக திட்டினார். அப்போது நாங்களும் (சாந்தாஸ்ரீ, மானசா) அருகில் இருந்தோம். சிறிது நேரத்தில் அங்கு வந்த தமிழ்நாடு வர்த்தகப்பிரிவு மாநில தலைவர் திரவியம், பொன் பாண்டியன், பிராங்ளின் பிரகாஷ் ஆகியோர் எங்களிடம் அத்துமீறி நடந்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் எங்கள் அனைவரையும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

பெண்கள் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதும், திரவியம், பொன். பாண்டியன், பிராங்ளின் பிரகாஷ் ஆகி யோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ் வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இளங்கோவ னின் ஆதரவாளரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஆலிஸ் மனோகரி நேற்று மாலை அண்ணா சாலை காவல் நிலை யத்தில் ஒரு புகார் மனு கொடுத் துள்ளார். அதில், “விஜயதாரணி எம்எல்ஏ மற்றும் சாந்தாஸ்ரீ, மானசா ஆகியோர் என்னை சாதி பெயரை சொல்லி திட்டினர். மேலும், என்னை அடித்து கொலை செய்து விடுவதா கவும் மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு கடிதம்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நீக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT