விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார்.
பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் முருகன் தலைமை தாங்குகிறார். மேலிட பொறுப்பாளர் ரவி,இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில பொதுச்செயலாளர் ராகவன், துணைத்தலைவர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட தலைவர்கலிவரதன் வரவேற்புரையாற்று கிறார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பொதுக்கூட்டத்தையொட்டி விழுப்புரம் ஜானகிபுரத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.