சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பெத் தன்னசாமி கோயிலில் மாசித் திரு விழாவையொட்டி ஜல்லிகட்டுப் போட்டி நடைபெற்றது.
516 காளைகள் களமிறக்கப் பட்டன. 179 வீரர்கள் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் 38 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.