புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இரு ஆலோசகர்களை மத்திய உள்துறை நியமித்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசையை புதுச்சேரிக்கும் கூடுதல் பொறுப்பாக குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியமித்தார். அதைத்தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய உள்துறை துணைச்செயலாளர் கிருஷ்ணன் இன்று (பிப். 26) வெளியிட்டுள்ள உத்தரவில், "புதுச்சேரி துணைநிலை ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்ட சந்திரமவுலி, 1985-ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தவர். மகேஷ்வரி உத்தரப்பிரதேசம் பிரிவில் 1984-ல் ஐபிஎஸ் பேட்ச் ஆவார். சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரல் பொறுப்பும் வகிக்கிறார்.