சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புக்காக மத்திய துணை ராணுவப்படையினர் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் 3 அல்லது 4-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு கம்பெனியிலும் 100 முதல் 150 வீரர்கள் வரை இருப்பார்கள்.
இதில் 12 கம்பெனி துணைராணுவப் படையினர் சென்னைக்கும், மீதமுள்ள 33 கம்பெனி துணை ராணுவப் படையினர் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளனர்.
இதற்கிடையே பெங்களூரில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பெனி துணை ராணுவப்படையினர் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அதில் ஒருஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர்,2 ஏஎஸ்ஐ உட்பட 92 போலீஸார் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.