திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை 6.15 மணிக்கு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 13 நாட் கள் தீபத் திருவிழா நடைபெறும்.
முதல் நாளான இன்று காலையும் இரவும் பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெறும். 10-ம் நாள் விழாவில், அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அன்றிரவு (25-ம் தேதி) ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம் மன் சமேத அண்ணாமலையார் வீதியுலா நடைபெறும். 12 அடி உயரம் உள்ள ரிஷப வாகனத்தில், கடந்த 100 ஆண்டுகளாக வலம் வருகிறார். இந்த ஆண்டு ரிஷப வாகனத்துக்கு, சென்னை குன்றத் தூரைச் சேர்ந்த செந்தாமரைக்கண் ணன் என்ற பக்தர் அளித்த நன் கொடையால் ரூ.20 லட்சம் மதிப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட தகடு பொருத்தப்பட்டது. அதற்கான சிறப் புப் பூஜை நேற்று காலை நடை பெற்றது. தங்கத் தகடு பொருத்தப் பட்ட ரிஷப வாகனத்தில் வரும் 25-ம் தேதி இரவு அண்ணாமலையார் வரும் வரவுள்ளார்.