நீலகிரி மாவட்டத்தில் கழவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் அமைக்காத 9 கேரட் கழுவும் இயந்திரங்கள் மூடப்பட்டன.
கேத்தி பாலாடா பகுதியில்உள்ள கேரட் கழுவும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 47 கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ளன.
நிலத்தடி நீரைப் பயன்படுத்தி கேரட் கழுவிய பின்னர், அந்த நீரை அப்படியே நீர் நிலைகளில் கழிவுகளுடன் வெளியேற்றுகின்றனர். அதை சரி செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்து. கரோனா காலகட்டத்தால் சம்பந்தப்பட்டவர்கள் கூடுதல் காலஅவகாசம் கேட்டிருந்தனர். பின்னர்34 நிறுவனங்களில் பில்டரேசன்சிஸ்டம் முடித்து, தற்போது செயல்படுத்திவருகின்றனர்.
ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்புஅமைப்புகள் அமைக்காத 9 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவர்களுக்கும் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்ட பின்னர், மீண்டும் இயந்திரங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், தரன் உடனிருந்தனர்.