பூசனம்மாள். (கோப்புப் படங்கள்) 
தமிழகம்

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி இருவர் உயிரிழப்பு: குடியாத்தம் அருகே பரிதாபம்

செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 பெண்கள் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வசந்தா (55), பூசனம்மாள் (62). இவர்கள் இருவரும் எஸ்.மோட்டூர் கிராமத் தின் அருகே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கால்வாய் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு இருவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந் தனர். அப்போது, குடியாத்தத்தில் இருந்து பலமநேர் நோக்கி வேகமாக சென்ற ஆம்னி கார் சாலையை கடக்க முயன்ற இருவர் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் அதிக வேகத்தில் சென்றது. படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

வசந்தா

இது தொடர்பாக குடியாத்தம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தசாரதி விசாரணை செய்து வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய வாகனம் சைனகுண்டா சோதனைச்சாவடி அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டது.

விபத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் வெங்கசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ஆம்னி கார் ஓட்டுநர் மகேஷ் (26) என்பவரை கைது செய்தனர். திருமணத்துக்காக வந்தவர்கள் காரில் ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT