டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்; மார்ச் 3 முதல் விருப்ப மனு விநியோகம்: தினகரன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம், மார்ச் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் நேற்று (பிப். 24) விருப்ப மனுத் தாக்கல் தொடங்கியது. அதேபோன்று, திமுக சார்பிலும் விருப்ப மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமமுக சார்பில் வரும் மார்ச் 3 முதல் விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (பிப்.25) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"தமிழகம், புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 3.03.2021 - புதன்கிழமை முதல் 10.03.2021 - புதன்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், கீழே குறிப்பிட்டுள்ளபடி விருப்ப மனு கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விருப்ப மனுவுக்கான கட்டணத் தொகை

தமிழ்நாடு - ரூ.10 ஆயிரம்

புதுச்சேரி - ரூ.5 ஆயிரம்

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளிக்க கடைசி நாள்: 10.03.2021".

இவ்வாறு தினகரன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT