டெல்லிக்கு ஏன் வரவில்லை என, புதுச்சேரி முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியிடம் பிரதமர் மோடி கேள்வி கேட்டார்.
புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (பிப். 25) வந்தார். காலை 11.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வந்தார். பிரதமருக்கு துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன், எம்எல்ஏ பாஸ்கர், கிழக்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர், பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜ், தலைமைச் செயலாளர் அஸ்வானி குமார், டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஆகியோர், பிரதமர் மோடிக்கு 'வணக்கம்' தெரிவித்து வரவேற்றனர்.
ரங்கசாமி வரவேற்றபோது, பிரதமர் மோடி அவரை ஆரத்தழுவினார். அப்போது, பிரதமர் மோடி, "உங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆனது? ஏன் டெல்லிக்கு வர சொன்னால் வரமாட்டேங்கிறீங்க? டெல்லிக்கு வாங்க" என அழைப்பு விடுத்தார்.