மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து புதுக்கோட்டையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 3,000 பேர் கைது செய் யப்பட்டனர். போராட்டத்தின்போது தடியடி, கல்வீச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கெங்கையம்மாள். இவரது கணவர் சொக்கலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் சிலர் இரு வாரங்களுக்கு முன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர்.
அப்போது, அவர்களை அமைச் சர் இழிவாகப் பேசியதாக தகவல் வெளியானது. அமைச்சரை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினர். ஆனால், போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமார் தலைமை யில் புதுக்கோட்டையில் நேற்று ஏராளமானோர் திரண்டனர். ஆர்ப் பாட்டம் நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, புதுக்கோட்டை அண்ணா சிலை, அதிமுக அலுவ லகம், பழைய பேருந்து நிலையம், மேட்டுப்பட்டி, கேப்பறை, இச்சடி, கந்தர்வக்கோட்டை, பெருங்க ளூர், திருக்கோகர்ணம் உள்ளிட்ட பகுதிகளில் மறியல் மற்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையில், சின்னப்பா பூங்கா, அண்ணா சிலை பகுதிகளில் திரண்ட சிலர், கற்களை வீசினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீஸார் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புதுக் கோட்டையில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். கிராமப் பகுதி களில் கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.