கோவை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தீபமேற்றி, `அதிமுகவைக் காப்போம்' என உறுதிமொழி ஏற்றுக்கொண்ட எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி உள்ளிட்டோர். 
தமிழகம்

கோவையில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மாநகர் மாவட்டச் செயலர் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. தலைமையிலான அதிமுகவினர், கட்சி அலுவலகத்தில் இருந்து ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட படத்துடன் ஊர்வலமாகச் சென்று, அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்குமாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

பின்னர், தமிழகத்தில் மீண்டும் முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவது என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர்மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் கே.ஆர்.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தீபமேற்றி‘அதிமுகவைக் காப்போம்' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT