விஜயபாஸ்கர் 
தமிழகம்

தமிழகத்தில் உருமாறிய கரோனா பரவ வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உருமாறிய கரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

தேனி மாவட்டம், போடியில் வ.உ.சி. சிலை நேற்று திறக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் உருமாறிய 2-வது கட்ட கரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என மருத்துவக்குழு கூறியுள்ளது. இருப்பினும், முகக் கவசம், சமூக விலகல் உள்ளிட்ட விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் அரசு உரிய முறை யில் கரோனா தடுப்பு முன் எச்சரிக்கை மேற்கொண்டதால் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார்.

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், ‘‘தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள் ளனர். இதன் மூலம் சுமார் 1000 பேருக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியே அமையும். அதிமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றார்.

SCROLL FOR NEXT