தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (24-ம் தேதி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், காலியாக உள்ள கிராம உதவியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வி.ஏ.ஓ. பதவி உயர்வுக் காலத்தை, 10 ஆண்டிலிருந்து 5 ஆண்டாகக் குறைக்க வேண்டும், மணல் திருட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கிராம உதவியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வண்டலூர் வட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் தில்லை கோவிந்தன், செயலாளர் எத்திராஜ், பொருளாளர் சிவராஜ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சேகர், வண்டலூர் வட்டச் செயலாளர் மோகன், பொருளாளர் சுகன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.