தமிழகம்

சாதனை தமிழச்சி சசிகலாவைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்: பாரதிராஜா பேட்டி

செய்திப்பிரிவு

சசிகலாவை மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அவரை அரசியல் கட்சித் தலைவர்கள், கலைத்துறையினர் சந்தித்து வருகின்றனர். அவரைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா ஒரு சாதனை தமிழச்சியைச் சந்தித்தேன். அவர் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவார் என்று தெரிவித்தார்.

4 ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் அமைதியாக இருந்த சசிகலா இன்று ஜெயலலிதா பிறந்த நாளில் முதன்முதலாக ஊடகங்கள் முன் தோன்றி பேட்டி அளித்தார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். விரைவில் பொதுமக்களைச் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்தார்.

சசிகலாவின் பேட்டி ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்த, அவரைச் சந்திக்க விஐபிக்கள் அணிவகுப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், சசிகலாவைச் சந்தித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சசிகலாவைச் சந்தித்தார்.

திரையுலகைச் சேர்ந்த மூத்த இயக்குநர் பாரதிராஜா, அமீர், தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் இன்று சந்தித்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். மேலும், பலரும் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவைச் சந்தித்தபின் பேட்டி அளித்த இயக்குநர் பாரதிராஜா, “ஒரு சாதனை தமிழச்சியைப் பார்க்க ஆசைப்பட்டேன். வீரத் தமிழச்சி, சாதனை தமிழச்சியான சசிகலா அவரைச் சந்தித்துப் பேச நினைத்தேன் வந்தேன். தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பத்தான் அவர் வந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT