தமிழகம்

தமிழக இடைக்கால பட்ஜெட்: கரோனா நிவாரணத்துக்கு இதுவரை ரூ.11,943 கோடி செலவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மத்திய அரசு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை குடும்பத்தலைவரின் இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சமும் விபத்து மரணத்துக்கு ரூ.4 லட்சமும் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

கரோனா நிவாரண பணிகளுக்கு இதுவரை ரூ.11, 943 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு, ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு’ திட்டத்தை தொடங்கிவைத்துள்ளது. இந்த திட்டத்துக்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் .

வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள 55 லட்சத்து 67 ஆயிரம் தகுதியான ஏழை குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கையாக இறந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சமும், நிரந்தர இயலாமை ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

மாநில பேரிடர் பொறுப்பு நிதியில் இருந்து கரோனா நிவாரணப் பணிகளுக்கு இதுவரை ரூ.11,943 கோடி செலவிடப்பட்டுள்ளது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடையில் இருந்து ரூ.200 கோடி, பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT