தமிழகம்

பொன்முடி அப்போலோவில் அனுமதி

செய்திப்பிரிவு

திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர் களிடம் கேட்ட போது, "பொன்முடிக்கு சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதனால் தான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்குப்பின் எல்லாம் சரியாகிவிடும். மற்றபடி அவருக்கு ஒன்றும் இல்லை. அவர் நலமுடன் உள்ளார்” என்றனர்

SCROLL FOR NEXT